கோவை குண்டு வெடிப்பு 58 தியாகிகளுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும்: சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை!

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள இந்துக்கள் கல்லறை தோட்டத்தில், ஆடி 18 முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த கணேஷ் மற்றும் சிவா ஆகியோரின் கல்லறைகளில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.
**இயக்கத்தின் முக்கியக் கோரிக்கை:**
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மாரி கூறியதாவது:
"ஆடி 18 தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் உயிரிழந்த கணேஷ் மற்றும் சிவா ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். இந்த நாளில் தமிழக அரசுக்கு எங்களது ஒற்றைக் கோரிக்கையை முன்வைக்கிறோம். **கோவை குண்டு வெடிப்பில் சிக்கி உயிர்நீத்த 58 தியாகிகளுக்கும் கோவையில் தமிழக அரசு நினைவுத்தூண் அமைக்க வேண்டும்**" என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்