கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே, திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் புகாரில் உரிய நியாயம் வழங்கக் கோரியும், விசாரணையை மூடி மறைக்க முயல்வதாகக் கூறப்படும் தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கச் செயலாளர் ரமேஷ் மற்றும் தலைவர் சாந்தாமணி ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்