கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா!
கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா, முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மாணவியரின் தலைமைத்திறன் மற்றும் சமூகப் பொறுப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.
ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் ஆர். நந்தினி வரவேற்புரையாற்றி, மாணவியர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தித் திறமைகளை வளர்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர் பி. பீ. ஹாரதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற 'Veranda Learning Solutions Limited' துணைத் தலைவர் திரு. சிவக்குமார் கணேசன், இன்றைய போட்டி உலகிற்கு ஏற்ப தொடர்ச்சியான கற்றல், திறன் மேம்பாடு மற்றும் புதுமைச் சிந்தனையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
நிறைவாக, மாணவர் மன்றத் தலைவர் செல்வி ஜெய்சிகா வர்ஷினி கே. நன்றியுரையாற்றினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்