கலைமகள் சபா உரிமை மீட்பு குழுவினர் கோவையில் சட்ட போராட்டம்
கலைமகள் சபா என்ற கூட்டுறவு அமைப்பு ஜான் என்பவரால் 1984 ல் உருவாக்கப்பட்டு , சுமார் 5.33 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து முதலீடு மற்றும் டெபாசிட் தொகைகள் பெறப்பட்டு அதன் மூலம் 13500 ஏக்கர் நிலம் சொத்துக்கள் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாங்கப்பட்ட நிலையில் அந்த அமைப்பு முறைகேடு புகார்கள் காரணமாக 1999 ஆம் ஆண்டு முடக்கபப்ட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனுவில், உறுப்பினர்களிடமிருந்து சுமார் ரூ.150 கோடி பெறப்பட்டதாகவும், அதில் ரூ.50 முதல் ரூ.75 கோடி வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை சுமார் ரூ.100 கோடி இருக்கலாம் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கலைமகள் சபாவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 3,088 சொத்துகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குவதற்காக, சபாவுக்குச் சொந்தமான சொத்துகளை அடையாளம் கண்டு, அவற்றை மதிப்பீடு செய்து, தேவையான சொத்துகளை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனை கண்காணிப்பதற்காக முன்னாள் நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கபப்ட்டுள்ளது இந்நிலையில் ஏலம் விட்டு தங்களுக்கு பணம் வேண்டாம் உறுப்பினரக்ள் பெயரில் பதியபட்ட இடத்தை தங்களுக்கு சொத்தாகவே வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் உரிமை மீட்பு குழு அமைத்து சட்ட போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்