கோவையில் கொங்கு பேரவை மற்றும் அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா!

கோவை நவ இந்தியா ஹிந்துஸ்தான் கல்லூரியில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மற்றும் கொங்குநாடு அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு விழா நடைபெற்றது. தலைவர் கொங்கு தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிரவை ஆதீனம் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உட்பட 750-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கியவர்களுக்குச் சாதனையாளர் மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்